புதிய சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்!

சீனா அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டம் தீவிரமாகியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கையெழுத்திட்டார். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுயாட்சியை அழிக்கும் நடவடிக்கை என சாடியுள்ளார். சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு, அமெரிக்கா எப்போதும் ஆதரவு தரும் எனவும், சீனா தனது சர்வாதிகாரத்திற்குள் ஹாங்காங்கை விழுங்குவதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இச்சட்டத்தை கண்டித்து ஹாங்காங்கில் போராட்டம் வெடித்துள்ளது.

Exit mobile version