ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
ஹாங்காங்கின் யுயென் லாங் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்குள் புந்த முகமுடி அணிந்த மர்ம நபர்கள் பொதுமக்களை தாக்கியுள்ளனர். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்களையும் அந்த மர்ம கும்பல் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், 45 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து யுயென் லாங் பகுதில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதை அடுத்து, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.