பிரதமர் செல்லும் வழியில் குறுக்கே விழுந்த போராட்டக்காரர்?

போராட்டக்காரர் ஒருவர் குறுக்கே விழுந்ததால், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனின் கார் சிறிய விபத்துக்கு உள்ளான சம்பவம் அந்நாட்டில் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு எதிராக பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரதமர் போரீஸ் ஜான்சன், தொழிலாளர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் காவலர்கள் பாதுகாப்புக்காக சென்ற நிலையில், சாலையோரம் இருந்த போராட்டக்காரர் ஒருவர் திடீரென பிரதமர் செல்லும் வழியில், குறுக்கே விழுந்துள்ளார். இதனால், இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் திடீரென பிரேக் பிடித்ததில் பின்னால் வந்த காருடன் பிரதமரின் காரும் அடுத்தடுத்து மோதின. இதில், பிரதமரின் கார் லேசான சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், குறுக்கே விழுந்த ஆர்பாட்டக்காரரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிரதமரின் வாகனம் பாதுகாப்பாக சென்றதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

Exit mobile version