தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளரான கனிமொழிக்கு சொந்தமான மதுபான ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பெண்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் பேரவை கூட்டம், தஞ்சாவூரில் உள்ள பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. மதுவிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும், மே 14 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான மதுபான ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.