இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் தலா 3 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தைப் பயன்படுத்தி இதுவரை 29 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்காளர் அட்டையைச் சரி பார்த்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 65 பேர் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வாக்காளர் சரி பார்ப்புத் திட்டத்தின் காலக்கெடு 15ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இதுவரை 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.