கள்ள ஓட்டு போட முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கள்ள ஓட்டு போட முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகினி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் மக்களவை தேர்தலில் களப்பணியாற்றும் வாக்குசாவடி அலுவலர்காளுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ரோகினி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாவட்டத்தில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கள்ள ஓட்டு போட முயற்சித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version