ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் சட்ட விரோதமாக குழாய்கள் பதித்து மோட்டார் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
பவானியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பவானி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதால் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்படும் என்று கூறினார்.