அர்ஜென்டினா அதிபர் மரிசியோ மேக்ரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, இந்தியா அர்ஜெண்டினா இடையே கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பயங்கரவாதம், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவருவதால், பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்து விட்டதாகவும், இந்த மிருகத்தனமான தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், அர்ஜென்டினா அதிபர், தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்ததாகவும், இந்த பயங்கரவாத தாக்குதலை அர்ஜென்டினா கண்டிப்பதாகவும் , மனித குலத்தின் துன்புறுத்தலை எதிர்த்து போராடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா-அர்ஜென்டினா இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.