மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கண்டித்து வேலைநிறுத்த போராட்டம்

பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்களுக்கு விரோதமான கொள்கைகளை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கண்டித்து இன்றும் நாளையும் நடைபெறும் வேலைநிறுத்தத்தை அடையாளப்படுத்தும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் வெங்கடாசலம், பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்களுக்கு விரோதமான கொள்கைகளை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் அதிகளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

Exit mobile version