திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தேக்கு மரம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் தேக்கு மரம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பால் வெட்டாற்றங்கரையில் ஏராளமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழுந்தன. இம்மரங்களை பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் ரகசியமாக பல்கலைகழக வளாகத்தினுள் பதுக்கியது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இச்சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.பல்கலைக்கழகத்தின் பதிவாளர் என்ற அடிப்படையில் என்னிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version