பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுவதாக அதிகளவில் புகார் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை காவலர்கள் தவிர்க்கவேண்டும் என்று கூறியுள்ள டிஜிபி, செல்போன் பயன்பாட்டை தவிர்த்து பணியில் முழு கவனத்தை செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பணி நேரத்தின்போது செல்போன் வைத்திருக்கக்கூடாது என்று தெரிவித்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கட்டுப்பாடுகளை மீறி செல்போன் பயன்படுத்தும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், போக்குவரத்து, விஐபி பாதுகாப்பு, திருவிழா நிகழ்வுகளுக்கும் காவலர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.