இறப்பில் சேர நினைத்த விநோத கள்ளக் காதல்…

கோவை லாட்ஜில், கை நரம்புகளை அறுத்துக் கொண்டு, கள்ளக்காதலியின் சடலத்துடன் 3 நாட்கள் தங்கியிருந்த கள்ளக்காதலனை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் 60 வயது முதியவரான முஸ்தபா. திருமணமாகி பேரன் பேத்தி எடுத்து விட்ட இவருக்கு, சமீபத்தில் 47 வயதான பிந்து என்ற பெண் மீது பிரேமம் பிறந்துள்ளது. பிந்துவிற்கு ஒரு மகள் உள்ளார். அறுபதாம் திருமணத்திற்கு ஆயத்தமாகும் வயதில் இருந்தாலும் இளம் காதலர்களே ஏக்கம் கொள்ளும் அளவிற்கு காதல் ரசம் பருகியுள்ளன இந்த காதல் வண்டுகள்

காதல் வண்டுகளின் போதை விஷயம், குடும்ப உறவுகள் காதுக்கு வர, இருவரது குடும்பத்திலும் வெட்டுக் குத்து நடக்காத குறைதான். தங்கள் காதலை காப்பாற்றி கொள்ள நினைத்த அந்த காதல் அகதிகள், கோழிக்கோட்டில் இருந்து வெளியேறி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிறு லாட்ஜில் தஞ்சம் அடைந்தனர்.

500 கிலோ மீட்டருக்கு அப்பால் வந்து விட்டாலும் குடும்பத்தினரால் தங்களின் காதல் கொச்சைப்படுத்தப்பட்டதை அவர்களால் மறக்க முடியவில்லை. அவமானத்தை ஆற்ற ஆல்கஹாலை துணைக்கு அழைத்து கொண்டு போதையில் அயர்ந்து போனார் முஸ்தபா. ஆனால் பிந்துவால் பிள்ளைகள் காரி மொழிந்த அந்த கணத்தை மறக்க முடியவில்லை. துக்கம் தாளாத அவர், திடீரென புடவையால் ஃபேனில் சுருக்கிட்டு முடிவை தேடி கொண்டார்.

போதை தெளிந்து காலையில் எழுந்த முஸ்தபா, பிந்துவின் முடிவை கண்டு கதறி அழுதார். பின் நீயில்லா உலகில் நான் வாழ மாட்டேன் என்று கூறி அருகில் இருந்த கடைக்கு சென்று கத்தி வாங்கி வந்து கைகளில் உள்ள நரம்பு மற்றும் தொண்டைப் பகுதியில் அறுத்துள்ளார். அப்போதும் உயிர் பிரியவில்லை. இதையடுத்து காதலியின் சடலத்துடன் 3 நாட்கள் வலியில் துடிதுடித்த படி அறையிலேயே இருந்துள்ளார்.

இத்தனை வயதிற்கு பிறகு தோன்றிய இச்சை குணம் அவருக்கே அறுவருப்பாக தோன்றியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கழிவறைக்கு சென்று தனது அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். இதன் பின்னர் வலி தாங்க முடியாமல் அலற ரூம் பாய் அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் முஸ்தபா மயங்கிய நிலையிலும் அவருடன் வந்த பெண் சடலமாகவும் கிடந்துள்ளார்.

தகவலறிந்த போலீஸார், பிந்துவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். வலியில் மயங்கி கிடந்த முஸ்தபாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தள்ளாத வயதில் வைத்துக் கொண்ட தகாத உறவு காரணமாக சீரழிந்து நிற்கும் இந்த முதியவர்களின் செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Exit mobile version