கே.சண்முகம் இதுவரை வகித்து வந்த பொறுப்புகள் குறித்து ஒரு பார்வை

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்படுள்ள கே.சண்முகம் இதுவரை வகித்து வந்த பொறுப்புகளை பார்ப்போம்…

தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் ஜூன் 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாய குடும்பத்தில் பிறந்தவரான சண்முகம் வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது. 1985ல் பயிற்சி உதவி ஆட்சியராக தஞ்சையில் தனது பணியை தொடங்கினார்.

சேரன்மாதேவி சார் ஆட்சியர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் சண்முகம் பணிபுரிந்துள்ளார். ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர், சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநர், உணவுத் துறை செயலாளராக பணிபுரிந்த சண்முகம், கடந்த 9 ஆண்டுகளாக தமிழக நிதித் துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். மாநிலத்தின் நிதி நிலையை சிறப்பாக நிர்வகித்தவர் என்பது சண்முகத்தின் கூடுதல் சிறப்பு.

Exit mobile version