சென்னை வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து, பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதைத்தொடர்ந்து, குழந்தையை மீட்ட, நடிகை கீதா, குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதனையடுத்த, குழந்தைககு சுதந்திரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இதனையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிகிச்சைப்பெற்று வரும் குழந்தையை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், பச்சிளம் குழந்தையை கழிவு நீர் தொட்டியில் வீசியது வேதனையளிப்பதாக தெரிவித்தார். மேலும், மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மழைநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக உள்ளது
-
By Web Team

Related Content
தேனி: உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக கூறியது ஏன்? ஊழியர்களுக்கு நோட்டிஸ்
By
Web Team
July 5, 2021
கொரோனா முதல் அலையில் நோயாளிகளுக்கு சிறந்த உணவு வழங்கப்பட்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
June 13, 2021
7 வயது குழந்தை கடத்தல் - சிக்கிய குற்றவாளி
By
Web Team
June 11, 2021
``சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுவோம்”
By
Web Team
May 24, 2021
சுகாதாரத்துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
May 18, 2021