புயல் பாதிப்பு – முதலமைச்சர் நாளை கடலூரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்கிறார்.

புரெவி புயலால் கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால், சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கிட்டு வரும் நிலையில், நாளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களிலும், பாதிப்புகள் குறித்து, ஆய்வு நடத்துகிறார்.

 

Exit mobile version