ஜம்மு காஷ்மீரில் புர்ஹான் வானி நினைவு நாளை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த புர்ஹான் வானி, பாதுகாப்பு படையினரால் கடந்த 2016 ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்துடன் சமூக வலைதளம் மூலம் வெளிப்படையாக தீவிர வாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வந்ததால் தனது 22 வயதில் மிகவும் பிரபலம் ஆன தீவிர வாதி இவர். 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறி தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த புர்ஹான் வானி 21 வயதிலேயே மிக முக்கிய பொறுப்புக்கு வந்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைதளத்தில் இவரை பின் தொடர்பவர்கள் அதிகரித்த நிலையில் பாதுகாப்பு படையினர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் சுட்டுக்கொன்றனர். புர்ஹான் வானி மரணத்திற்கு காஷ்மீர் மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று புன்ஹான் வானி கொல்லப்பட்ட நாள் என்பதால் ஜம்மு காஷ்மீரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர்.