ஆதார் மூலம் யோனோ சேமிப்பு கணக்கு தொடங்குவதை பாரத் ஸ்டேட் வங்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ, ஆதார் மூலம் ‘யோனோ’ எனும் புதிய சேமிப்பு கணக்கை தொடங்கும் வசதியை கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், அந்த வங்கியில் ஏராளமானோர் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என்றும், வங்கி கணக்குடன் ஆதாரை சேர்ப்பது கட்டாயமில்லை எனவும் தெரிவித்தது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக, ஆதார் மூலம் யோனோ சேமிப்பு கணக்கை தொடங்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.