கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் மற்றும் லடாக் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட லாரிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஸ்ரீநகரில் உள்ள சோபியான் பகுதியில் இருந்து ஆப்பிள் ஏற்றிக்கொண்டு வந்த, தமிழகத்தைச் சேர்ந்த 500 சரக்கு லாரிகள், லடாக்கில் ஏற்பட்ட பனிப்பொழிவில் சிக்கின. இதனால், அப்பகுதி வழியாகச் செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆனால், சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால், லடாக்கின் லோகமண்டா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 500 லாரிகள் மற்றும் லாரி ஓட்டுநர்களை, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில், முதற்கட்டமாக 300 லாரிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஏராளமான லாரிகள் லடாக் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.