சுருளி அருவியில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டதால், சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சுருளி அருவிக்கு தூவானம் அணை மற்றும் அரிசிப்பாறை ஊற்றுத் தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. தற்போது, மழை குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து முழுவதுமாக நின்றுள்ளது. எனவே, அறிவிப்பு வரும் வரை, சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.