2000 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தம் – இந்திய ரிசர்வ் வங்கி

2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அண்மைக் காலமாக 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்களின் புழக்கம் குறைந்து விட்டதாகவும், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து  2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் வருவதில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் நாளிதழ் சார்பில் விவரங்கள் கேட்கப்பட்டன.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 2016 – 2017 நிதியாண்டில் 354 கோடி 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்பட்டதாகவும், 2017- 2018 நிதியாண்டில் 11 கோடி 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்களும், 2018-2019 நிதியாண்டில் 4 கோடியே 66 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்களும் அச்சிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டில் 2 ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version