ஆட்டத்தின் போது வித்தியாசமான பாவனைகளுடன் பந்துகளை தவிர்த்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித், பந்துகளை அடிக்காமல் தவிர்த்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில்,ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக ஆடி 80 ரன்கள் திரட்டினார். ஆட்டத்தின் போது அவர் பந்துகளை தவிர்த்த விதம் ரசிகர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை, விதவிதமான கோணங்களில் எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித், பந்துகளை அடிக்காமல் தவிர்த்ததுடன் அவரின் பாவனைகள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Exit mobile version