சமன் செய்யும் இங்கிலாந்து அணி! அனல் பறக்கும் ஆஷஸ் தொடர்!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது நேற்று முன் தினம் தொடங்கியது. அதிரடியாக முதலில் ப்[ஏட் செயத இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 26 ரன்களுடன் மார்னஸ் லபுஷன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2 வது நாளான நேற்றைக்கு ஆஸ்திரேலிய அணி ஆடுகளத்தை கனித்து தடுப்பாட்டத்தினை அதிகமாக ஆடியது. லபுஷேன் 82 பந்துகளில் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்ற ஆட எதிர்முனை பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியம் நோக்கி நடையைக் கட்டினர். முதலில் உஸ்மான் கவாஜா 47 ரன்களில் வெளியேறினார். பின்னர் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்னிலும், அலெக்ஸ் ஹேரி 10 ரன்னிலும், ஸ்டார்க் 7 ரன்னிலும் நடையைக் கட்டினார்கள்.

நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் ஸ்மித் மட்டும்  நிலைத்து நின்று ஆடினார். அவர்  ஆறு பவுண்டரிகளுடன் 71 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஒன்பதாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மர்பி ஜோடி அடிப்பொலியாக விளையாடியது. அவர்கள் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். மர்பி மூன்று சிக்சர்களை மார்க் உட்டின் ஓவரில் அடித்து பறக்க விட்டார். 34 ரன்னில் இருக்கும்போது மர்பி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஓரளவு அதிரடி காட்டிய கேப்டன் கம்மின்ஸ் 36 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் எடுத்திருந்தது. இது இங்கிலாந்து அணியை விட 12 ரன்கள் அதிகமாகும்.

Exit mobile version