ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. சுற்றுப்புற மாசுக்கு காரணமாக இருப்பதாக கூறி தமிழக அரசு, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இயங்க தடை விதித்தது. மத்திய பசுமை தீர்ப்பாயம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என பசுமை தீர்ப்பாயத்துக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து ஸ்டெர்லை ஆலையை திறக்கவேண்டுமென பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்படாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலை எவ்விதத்திலும் மீண்டும் திறக்கப்படாது என கூறியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version