ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்த்து வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்த வழக்கு வரும் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை பல்வேறு நிபந்தனைகளுடன் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழக அரசு தொடர்ந்த வழக்கும் இணைத்து ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.