உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கில், இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறுகிறது.
வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கிய கோரிக்கையும், உச்ச நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கையும் முரண்பாடாக இருப்பதாக, தமிழக அரசு நேற்று பதில்மனு தாக்கல் செய்தது. தவறான தகவல்கள் அளித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயல்வதால், வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தது. தமிழக அரசு சார்பில் இன்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இன்றுடன் விசாரணை முடிவடைவதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.