ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது -அமைச்சர் கருப்பணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்தும் தெரிவிக்க முடியாது என, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கருப்பணன், நாட்டு மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அது குறித்து கருத்து கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Exit mobile version