ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : புதன் கிழமை விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறைவேற்ற கூறிய நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற வில்லை என்று கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை இன்றே திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. விசாரணையை 29ம் தேதி நீதிமன்றம் ஒத்தி வைத்து இருப்பதாக, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் சர்மா தெரிவித்தார்.

Exit mobile version