தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வந்தது.
முதற்கட்டமாக நேற்று 5 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, 35 டன் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பழுது சரி செய்யப்பட்ட பின்னரே உற்பத்தி துவங்கும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.