ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியத்திடம் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், பராமரிப்பு பணிக்களுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்றும் ஆலையில் மின்இணைப்பு கோருவதையும் பரிசீலிக்க முடியாது எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.