இணையத்தளங்களில் ஆபாசக் காணொலிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்துள்ளார்.
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் பேசும்போது, இணையத்தளங்களில் ஆபாசக் காணொலிகள் வெளியாவதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஆபாசக் காணொலிகளைத் தடை செய்வதுடன், அத்தகைய காணொலிகளை வெளியிடும் இணையத்தளங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதை ஆதரித்துப் பேசிய அவைத் தலைவர் வெங்கைய நாயுடு, இணையத்தளங்களில் வெளியாகும் ஆபாசக் காணொலியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணையத்தளத்தில் ஆபாசக் காணொலியை வெளியிடும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.