வேலூர் மாநகராட்சியில் புதைவட மின்கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தின் போது, பதிலளித்த அமைச்சர், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதால் அதற்கான நிதியை உள்ளாட்சித்துறை வழங்கினால் புதைவட மின்கம்பிகள் திட்டத்தை செயல்படுத்த எளிதாக இருக்கும் என்றார். நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு மாநகராட்சியிலும் புதைவட மின் கம்பிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் வேலூர் மாநகராட்சியிலும் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.