திரைப்பட டிக்கெட்டுகள் இணையதள மயம் ஆக்கப்படுவது குறித்து குறுகிய காலத்தில் பேசி, நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 24ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ம.பொ.சியின் பணி தமிழ் உள்ள வரை இருக்கும் என புகழாரம் சூட்டினார். தீபாவளிக்குள் திரைப்பட டிக்கெட்டுகள் இணையதளமாக்கப்படுவது குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாதது என்றும், அரசு விதிமுறைகளின்படி, அதிகமான விலையில் டிக்கெட்டுகள் விற்பதை கட்டுப்படுத்தவதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.