மோமோ விளையாட்டு மூலம் மாணவர்கள் தவறான வழிக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மோமோ என்ற இணையதள விளையாட்டு மூலம் மாணவர்கள் தவறான வழிக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோமோ விளையாட்டு மூலம் மாணவர்களின் வாழ்க்கை தடம் மாறுவதாகவும், இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இணையதள விளையாட்டுக்களால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் விரயமாவதுடன், அவர்களின் மனநிலையும் தேவையில்லாத குழப்பங்களுக்கு ஆளாவதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இணையதள விளையாட்டுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடமும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களிடமும் கலந்து ஆலோசிக்க, அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version