சென்னை மக்களின் தேவைக்காக வேலூரில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வருவது தொடர்பாக, ரயில்வே மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பருவமழை பொய்த்துப் போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதையடுத்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கான கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதற்கான பணிகளை குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக தொடங்கி உள்ளனர். ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது குறித்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Discussion about this post