500 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தியாகராயநகர் தொகுதிக்குட்பட்ட ஒட்டகப்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயவர்தன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.