சுர்ஜித்தை உயிரோடு மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது – துணை முதல்வர்

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை உயிரோடு மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில், கடந்த 25 ஆம் தேதி மாலை, ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்தான். இதனையடுத்து உடனடியாக சிறுவனை மீட்கும் பணி துவங்கியது.

பல்வேறு கடினமான கட்டங்களை தாண்டி தொடர்ந்து 60 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வரும் இந்த மீட்பு பணிகளை துணை முதல்வர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு முகாமிட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மீட்பு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். துணை முதலமைச்சருடன் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமாரும் உடன் இருந்தார்.

Exit mobile version