ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையிழப்பு நோயால் தாக்கப்பட்டார் ஹாக்கிங். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் உள்ளிட்ட உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், கணினி மூலமாக தன்னுடைய பேச்சை மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தினார்.
தானியங்கி சக்கர நாற்காலியில் இருந்தவாறே பல கோட்பாடுகளுக்கு விளக்கமளித்தார். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.
இவர் 2018 மார்ச் 14 ஆம் தேதி, தனது 76-வது வயதில் காலமானார்.அவர் பயன்படுத்திய தானியங்கி சக்கர நாற்காலி லண்டனில் ஏலம் விடப்பட்டது. அதை, இந்திய மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்தார். இந்தத் தொகை எதிர்பார்த்தை விட இரு மடங்கு அதிகம் என கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.