காத்திருங்கள் 4.30 மணி வரை..பிகில் திரைப்படத்தின் புதிய அப்டேட்…

பிகில் திரைப்படத்தின் ’உனக்காக’ என்ற பாடல்  இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் பிகில்..இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.யோகி பாபு, விவேக் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் இணைந்துள்ளனர்.இப்படத்தினை ஏ.ஜி.எஸ் என்டர்டைமெண்ட்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.பிகில் திரைப்படத்திலிருந்து விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.செப்டம்பர் மாதம் முதலே அடுத்தடுத்து பிகில் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் audio launch நாளை நடைபெறவிருக்கும் நிலையில்,இன்று மாலை 4.30மணிக்கு ’உனக்காக’ என்ற பாடல் வெளியாகவுள்ளது என படத்தின் இயக்குநரான அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து ’உனக்காக ‘ என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

 

மேலும் நாளை பிகில் படத்தின் audio launch-இல் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் performance செய்ய ’வெறித்தனம்’ பாடலை தளபதி விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இது தளபதி ரசிகர்களுக்கு மறக்கமுடியாத தருணமாக அமையவுள்ளது.

Exit mobile version