திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மூன்றாவது நாளாக சிலைகள் ஆய்வுப்பணி !

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மூன்றாவது நாளாக இன்றும் சிலைகள் ஆய்வுப்பணி நடந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தஞ்சை,திருவாரூர்,நாகை,கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 625 கோவில்களில் உள்ள சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இங்குள்ள 4,635 சிலைகளை ஆய்வு செய்யும் பணி கடந்த அக்டோபர் 21-ம் தேதி தொடங்கியது.சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தொல்லியல் துறையினர் இணைந்து நடத்தும் ஆய்வில் முதற்கட்டமாக 146 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட, சிலை ஆய்வுப்பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு          டி.எஸ்.பிக்கள் மலைச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த ஆய்வுப்பணியை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.இந்த நிலையில் இந்த ஆய்வுப்பணி மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Exit mobile version