திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சிலைகள் விதவிதமாக வடிவமைக்கப்பட்டு, விறபனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ஆரணி நகரம், கண்ணமங்கலம், சந்தவாசல், எஸ்.வி.நகரம், களம்பூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை விதவிதமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. வானர்படை மற்றும் தேவர்களுடன், எலி வாகனத்தில், சிம்ம வாகனம், அன்னப்பறவை, மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு அவதாரத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.