மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வீணடிப்பதை நிறுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜனை பகிர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், ஆக்சிஜன் வீணடிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்றும், இதனை அனைத்து மாநிலங்களும் சிறப்பாக செய்யுமென்று எதிர்பார்ப்பதாகவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.