திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனை குறித்த அறிக்கையை, வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, மற்றும் அவரது கல்விநிறுவனங்கள், மற்றும் அவரது நெருக்காமனவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் ஆய்வு செய்து 11 கோடியே 53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து துரைமுருகனின் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வருமானவரித்துறையினரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
இந்த விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட ஏராளமான பணம் மற்றும் ஆவணங்களை, வருமான வரித்துறையினர் விரிவான அறிக்கையாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவிற்கும் சமர்ப்பித்துள்ளனர். இதனால்,வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை வாய்ப்புண்டு என்றுகூறப்படுகிறது. அதேபோல், பெரம்பலூர் விசிக பிரமுகரிடமிருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.