மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக எம்.பிக்களுடன் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராகவும், காவிரி ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராகவும், மேகேதாட்டுவில் அணை கட்ட, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடக எம்.பிக்களுடன், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.