திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திக் காட்டிய மல்லர்கம்பம், கயிறு மலர்கம்பம் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு நடத்தப்படும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது. தனியார் பள்ளி ஒன்றில், மூன்று நாட்கள் நடைபெறவுள்ள உள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மால்கம் எனப்படும் மலர்கம்பம் மற்றும் ரோப் மால்கம் எனப்படும் கயிறு மலர்கம்பத்தில், யோகாசனங்கள் செய்து அசத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன்பிறகு, நீச்சல், மிதிவண்டி, கேரம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெறும் மாணவ-மாணவியர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.