கோவை அருகே, மாநில அளவிலான கைப்பந்து போட்டி5 நாட்களுக்கு நடைபெற்றது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில், 5 நாட்களாக மின் ஓளியில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியன் வங்கி, சுங்கவரித்துறை, தமிழக காவல்துறை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், வருமான வரித்துறை, அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த நிலையில் இறுதி போட்டியில், இந்தியன் வங்கி அணியும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் 3க்கு 2 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கைப்பந்து கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.