மாநில அளவிலான வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ், தண்டால் போட்டிகள் – அமைச்சர் போட்டிகளை துவக்கி வைத்தார்

கோவையில் தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ், தண்டால் போட்டிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துபாளையம் பகுதியில், சாம்பியன் ஜிம், IFF அமைப்பு இணைந்து, 7 பிரிவுகளில் வலுதூக்கும் பெஞ்ச்பிரஸ் போட்டிகளையும், 8 பிரிவுகளில் தண்டால் போட்டிகளையும் நடத்தின.

தமிழ்நாடு அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதனை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இறுதியாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version