தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடங்கியுள்ளன.
கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளத்தில் மாநில அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டி தொடங்கியது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோவில்பட்டி பாரதி நகர் ஹாக்கி அணியும், பாண்டவர்மங்கலம் ஹாக்கி அணியும் மோதின. இந்த போட்டியில் பாரதி நகர் ஹாக்கி அணி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது போட்டியில் அருப்புக்கோட்டை மற்றும் மூப்பன்பட்டி ஹாக்கி அணிகள் மோதின. இதில் ஒன்பதுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அருப்புக்கோட்டை ஹாக்கி அணி வெற்றி பெற்றது.