தாழம்பூர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு: வாங்க, விற்க தடை விதித்தது உயர்நீதிமன்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் அரசுக்கு சொந்தமான 600 ஏக்கர் புறம்போக்கு நிலம், அபகரிக்கபட்டது தொடர்பான வழக்கில், நிலத்தை வாங்கவும், விற்கவும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சத்திய நாராயண ரெட்டி என்பவர், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் 16 ஏக்கருக்கு மட்டுமே பட்டா பெற்றுள்ளார். இந்நிலையில், அந்த நிலத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அபகரித்த அரசு நிலத்தை காசா கிராண்டே எனும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே காசா கிராண்டே நிறுவனம் தாங்கள் வாங்கிய நிலத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது. இதன் வழக்கு விசாரணையின் போது, போலி ஆவணங்களுடன் அரசுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காசா கிராண்டே உள்ளிட்ட யாரும் சம்பந்தப்பட்ட இடத்தை வாங்கவோ விற்கவோ கூடாது என உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக்கான அவசியம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version