கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலினால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1500 மின்கம்பங்களும், 40 டிரான்ஸ்பார்மர்களும், 1141 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிவாரண பணியில் மாவட்டம் முழுவதும் 81 குழுக்களை சேர்ந்த 1110 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், மாவட்டம் முழுவதும் 86 குடிசை வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புயல் சேதத்திற்கான மாநில அரசு கேட்கும் முழு நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்குவது இல்லை என்றும் மாநில அரசே சொந்த நிதியில் செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கஜா புயலை ஒட்டி, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், இதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவரும் தமிழக அரசைப் பாராட்டி உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.