பொருளாதார பற்றாக்குறையை போக்க ரிசர்வ் வங்கியில் இருந்து மாநில அரசுகள் கடன் பெற்று கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
டெல்லியில் 41 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், 97 ஆயிரம் கோடி ரூபாயை குறைந்த வட்டியில் கடனாக வழங்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளதாகவும், இந்த பணத்தை பெற்று கொள்ளும் மாநில அரசுகள், அவற்றை திரும்ப செலுத்த 5 ஆண்டுக்காலம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முடிவு எடுக்க மாநிலங்கள் 7 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறிய நிர்மலா சீதாராமன், கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூல் கணிசமாக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.